4,610 Reviews ● 1,343 Films/Shows ● 59 Top Critics
37 Languages ● And Growing!

/images/members/srinivasan-r.jpg

Srinivasan R

Ananda Vikatan

Srinivasan R. is a Chennai-based journalist, film critic, and editorial leader with over 14 years of progressive experience across digital media and broadcast journalism. Currently serving as the Chief Digital Content Editor at Ananda Vikatan, he handles content strategy for the website and serves as a jury member for the prestigious Vikatan Cinema Awards.

A versatile multimedia critic, Srinivasan regularly scripts and anchors the popular movie review show for Cinema Vikatan. Over his career, he has conducted high-impact bilingual interviews with prominent industry personalities, including filmmakers and actors such as Vidhu Vinod Chopra, Sriram Raghavan, Manoj Bajpayee, and Vijay Sethupathi. He holds a degree in Visual Communication alongside a certification in Writing for TV from the Al Jazeera Media Institute.

All reviews by Srinivasan R

Image of scene from the film Pooja Meri Jaan
Director:Navjot Gulati
Cast:Mrunal Thakur, Huma Qureshi, Vikram Singh Chauhan, Vijay Raaz, Sunita Rajwar, Rajesh Jais, Suparna Marwah, Chaitanya Vyas, Nikhil Angrish, Madhu Sachdeva
Writer:Navjot Gulati, Kanishka Singh Deo, Niren Bhatt

Pooja Meri Jaan

Thriller, Crime, Romance (Hindi)

மொத்தப் படத்தையும் கிட்டத்தட்ட ‘ஒன்வுமன் ஆர்மி’யாகத் தாங்குகிறார் மிருணாள் தாகூர்.

Thu, October 15 2026

டெல்லியில் குடும்பத்துடன் வசித்துவரும் பூஜாவை (மிருணாள் தாகூர்), அனிகெட் (விக்ரம் சிங் சௌஹான்) ஒருதலைப்பட்சமாகத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். திடீரென அனிகெட் தற்கொலை செய்துகொள்ள அதற்கு பூஜாவே காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வழக்கில் பூஜாவுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறார் வக்கீலான சனா மெஹ்ஃபூஸ் (ஹூமா குரேஷி). அனிகெட்டின் மரணத்துக்கு யார் காரணம் என்பதே இந்த ஜி5 இந்தி சினிமா. மொத்தப் படத்தையும் கிட்டத்தட்ட ‘ஒன்வுமன் ஆர்மி’யாகத் தாங்குகிறார் மிருணாள் தாகூர். பூஜாவின் அச்சம், கோபம், வேதனை, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய போராட்டம் என நீதிமன்றக் காட்சிகளில் ஒவ்வோர் உணர்வையும் மிக இயல்பாகக் கடத்துகிறார். வழக்கறிஞர்களாக ஹூமா குரேஷி, விஜய் ராஸ் ஆகியோரின் வாதக் காட்சிகள் படத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துகின்றன. பெண்களைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பாலினப் பாகுபாடு எனப் பல கேள்விகளை முன்வைக்கிறது படம். ஆனால், முக்கியமான அனிகெட்டின் பாத்திரத்தை இன்னும் ஆழமாகக் கட்டமைத்திருக்கலாம். இருந்தும் முக்கியமான கோர்ட் ரூம் டிராமா இது!

Continue Reading…


Image of scene from the film East of Eden
Cast:Florence Pugh, Christopher Abbott, Mike Faist, Joseph Zada, Joe Anders, Tracy Letts, Ciarán Hinds, Hoon Lee, Martha Plimpton

East of Eden

Drama (English)

OTT Corner

Thu, October 15 2026

இருண்ட, சிக்கலான கேத்தி கதாபாத்திரத்தில் ஃபுளோரன்ஸ் பியூ (Florence Pugh) தனது அசாத்தியமான நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார். கிறிஸ்டோபர் அபோட், மைக் ஃபெய்ஸ்ட் தங்களது எதார்த்தமான நடிப்பால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் பிரமாண்டமான கலை இயக்கமும், நேர்த்தியான திரைக்கதையும், மனதைத் தொடும் பின்னணி இசையும் தொடரின் ஆகப்பெரும் பலம். நாவலின் ஆழமான தத்துவங்களைத் திரைக்குக் கொண்டுவரும் முயற்சியில், திரைக்கதையின் வேகம் பல இடங்களில் தடுமாறுவது பார்வையாளர்களுக்குச் சற்று சோர்வைத் தரலாம். இருப்பினும், மனித உணர்வுகளின் இருண்ட பக்கங்களை மிக நேர்த்தியாகப் பதிவுசெய்திருக்கும் ஒரு தரமான கிளாசிக் டிராமா!

Continue Reading…


Image of scene from the film #Love
Director:Balaji Mohan
Cast:Arjun Das, Aishwarya Lekshmi, Arjun Chidambaram, Gayatri Hariharan, Surya Rajeevan, Arjun Manohar, Abishek Joseph George, Harini Sundararajan, R. Badree
Writer:Nirmal Williams, Sharada Subramanian, Shweta chakravarthy

#Love

Drama (Tamil)

OTT Corner

Thu, October 15 2026

AI மூலம் கேள்விகள் கேட்டு, ஜோடிகளின் ‘பொருத்தத்தை’ (Compatibility) மையமாகக் கொண்டு இயங்கும் ஃபவுண்ட் (Found) என்ற டேட்டிங் செயலியின் சி.இ.ஓ தாரா (ஐஸ்வர்யா லெஷ்மி). மறுபுறம், உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் தந்து, ஜோடிகளின் ஈர்ப்பை (Chemistry) அடிப்படையாகக்கொண்டு இயங்கும் `ஃபைண்ட் மை பே’ (Find My Bae) என்ற செயலியின் முதலீட்டாளர் மேத்யூ (அர்ஜுன் தாஸ்). இரு வேறு சிந்தனைகளைக்கொண்ட இவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்கிறார்கள். அதைத் தொடர்ந்து, நவீன காதலில் எது சிறந்தது என்பதை நிரூபிக்க 60 நாள்கள் நடக்கும் ஒரு சவாலும், அதில் மலரும் காதலுமே பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த நெட்ஃபிளிக்ஸ் தமிழ்த் தொடரின் சுவாரஸ்யமான கதைக்களம்.

Continue Reading…


Image of scene from the film Gandhari
Director:Devashish Makhija
Cast:Taapsee Pannu, Ishwak Singh, Mita Vashisht, Swastika Mukherjee, Chhaya Kadam, Jatin Sarna, Prashant Narayanan, Chandan Roy, Vishwanath Chatterjee, Priti Shroff
Writer:Kanika Dhillon

Gandhari

Action, Drama, Thriller (Hindi)

OTT Corner

Fri, September 18 2026

பானிக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு, அந்தச் சூழலிலும் குழந்தையைத் தேடி ஓடும் கதை சுவாரஸ்ய லைனில் செல்கிறது. குழந்தை கடத்தல் மாஃபியா பற்றிய விவரிப்பும் ஆராய்ச்சியும் படத்துக்கு ஆழமானதொரு நிறத்தைத் தருகின்றன.

பானியும் (டாப்ஸி) அவருடைய கணவரும் ரயிலில் சென்றுகொண்டிருக்கிறார்கள். திடீரென ஜாய்புரா என்ற ஊரில் அவர்களுடைய குழந்தையைக் கடத்திவிடுகிறார்கள். குழந்தையைக் காப்பாற்ற ஓடிச் செல்கையில் பானிக்குத் தலையில் அடிபட்டு கண்பார்வையில் பிரச்னை ஏற்படுகிறது. ஜாய்புராவில் இப்படியான குழந்தைக் கடத்தல் அதிகமாக நடப்பது பற்றியும், அதை நிகழ்த்தும் நெட்வொர்க் பற்றியும் பானி அறிந்துகொள்கிறார். அதன் பிறகு, பார்வைப் பிரச்னை சரியானாலும், பார்வைச் சவால்கொண்டவர் என்றே தனது அடையாளத்தை வைத்துக்கொண்டு ஜாய்புராவில் தங்கி, தன் குழந்தையைத் தீவிரமாகத் தேடுகிறார். இறுதியில் தன் குழந்தையைக் கண்டுபிடித்தாரா, இந்தக் கடத்தல் குழுவின் பின்னணி என்ன, ஜாய்புராவில் அவை எப்படி ஊடுருவியிருக்கின்றன என்கிற முடிச்சுகளை அவிழ்ப்பதே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வந்திருக்கும் இந்த ‘காந்தாரி’யின் கதை. (தமிழ் டப்பிங் உண்டு).

Continue Reading…


Image of scene from the film Babita Singh Reporting
Director:Ambiecka Pandit
Cast:Nimisha Sajayan, Anshumaan Pushkar, Barun Sobti, Rajesh Kumar, Geetika Vidya, Muskan Arora, Priyanka Setia, Sunita Rajwar
Writer:Amita Vyas

Babita Singh Reporting

Crime, Drama (Hindi)

OTT Corner

Thu, September 10 2026

காவல் அதிகாரியாக இருக்கும் பபிதா சிங் (நிமிஷா சஜயன்) பணியிடத்தில் தன் நலனைப் பார்க்காமல், பிறருக்காகவே ஒவ்வொன்றையும் யோசிக்கிறார். இரண்டு வாரம் விடுமுறை கிடைத்தால், தன் கணவரின் சகோதரியின் வளைகாப்பு நிகழ்வுக்குச் சென்றுவிடலாம் எனத் திட்டமிடுகிறார். ஆனால், விடுப்பு கிடைப்பதிலும் சில சிக்கல்கள் எழுகின்றன. மற்றொரு காவல் அதிகாரி செய்த தவற்றைத் தன்னுடைய தவறென ஒப்புக்கொண்டு இரண்டு வாரம் சஸ்பெண்ட் ஆகிறார் பபிதா சிங். இந்த இடைவெளியில் கணவரின் சகோதரி வளைகாப்புக்காக ஊருக்குச் செல்கிறார் பபிதா சிங். ஆனால், அங்கு பபிதாவின் பள்ளிக்கால நெருங்கிய நண்பர் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவருடைய மரணத்துக்குப் பின்னிருக்கும் காரணங்களை பபிதா சிங் அலசுவதே இந்த பிரைம் வீடியோ படத்தின் கதை.

Continue Reading…


Image of scene from the film Operation Safed Sagar
Director:Oni Sen
Cast:Dia Mirza, Jimmy Shergill, Siddharth, Abhay Verma, Mihir Ahuja, Taaruk Raina, Arnav Bhasin, Prajakta Koli, Adil Hussain, Vinay Pathak

Operation Safed Sagar

Drama (Hindi)

தொடக்கத்தில் த்ரில்லர் சினிமாவாக நகரும் படம், நம்மை இருக்கை நுனிக்குக் கொண்டு வருகிறது.

Thu, August 27 2026

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் பின்னணியில், அணு ஆயுதப் போர் மூளும் அபாயத்துக்கு இடையே நடக்கும் அரசியல், ராணுவ மோதல்களைப் பேசும் நெட்ஃபிளிக்ஸ் இந்தித் தொடர் இது. (தமிழ் டப்பிங் உண்டு).

18,000 அடி உயரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவலை முறியடிக்க, இந்திய விமானப்படையின் ‘கோல்டன் ஏரோஸ்’ (Golden Arrows) ஸ்க்வாட்ரன் நடத்திய சவாலான வான்வழித் தாக்குதலை விவரிக்கிறது இந்தத் தொடர். ஸ்க்வாட்ரன் லீடர் அஜய் அஹுஜா (சித்தார்த்), விங் கமாண்டர் டோனி (ஜிம்மி ஷெர்கில்) இணைந்து தங்கள் இளம் விமானிகளைப் போருக்கு எப்படித் தயார்படுத்தி வழி நடத்துகிறார்கள் என்பதே இதன் விறுவிறுப்பான மையக்கதை. நிஜப் போர் வீரர்களாக சித்தார்த்தும் ஜிம்மி ஷெர்கிலும் எந்தவிதமான மிகைப்படுத்தலுமின்றி, தங்களின் முதிர்ச்சியான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபாக வினய் பதக், அவரைத் தந்திரமாக இயக்கும் ஜெனரல் முஷாரஃபாக மனு ரிஷி சத்தா ஆகியோரின் நடிப்பும் தொடருக்குப் பெரும் பலம். அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, பிரஜக்தா கோலி, தியா மிர்ஸா எனத் துணைக் கதாபாத்திரங்களின் பங்களிப்பிலும் நேர்த்தி.

Continue Reading…


Image of scene from the film Insidious: Out of the Further
Director:Jacob Chase
Cast:Amelia Eve, Island Austin, Lin Shaye, Sam Spruell, Brandon Perea, Maisie Richardson-Sellers, Joseph Lopez, Laura Gordon, Charli Penton, Taylor Bogrand

Insidious: Out of the Further

Horror, Thriller (English)

அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்' எப்படி?

Sun, August 23 2026

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற `இன்சிடியஸ்' (Insidious) ஹாரர் யுனிவர்ஸில் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது `இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்'. `தி ரெட் டோர்' படத்துக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதை, லேம்பர்ட் குடும்பத்தைத் தாண்டி வேறொரு குடும்பத்தின் கதையைப் பேசுகிறது.

தாயின் துர்மரணத்துக்குப் பின், தன் பழைய வீட்டிலேயே மகள் மாயாவுடன் வசிக்கிறார் பல் மருத்துவர் ஜெம்மா. அங்கே அந்த வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேற, மறைந்த அமானுஷ்ய ஆராய்ச்சி நிபுணர் எலிஸின் (Elise) ஆன்மாவின் உதவியுடன் தன்னைப் பற்றிய உண்மையை அறிகிறார். அதாவது ஆன்மாக்களின் உலகத்திற்கு (The Further) சென்று வருவது மட்டுமன்றி, நிஜ உலகத்திலிருந்து அங்கும், அங்கிருந்து நிஜ உலகிற்கும் எந்தப் பொருட்களையும் எடுத்துவரும் ‘கூரியர்’ (Courier) என்ற அபூர்வ சக்தி தனக்கு இருப்பதை உணர்கிறார் ஜெம்மா. அவரின் இந்தச் சக்தியைப் பயன்படுத்தி நிஜ உலகைக் கைப்பற்றத் துடிக்கும் அசுர ஆன்மாக்களிடமிருந்து ஜெம்மாவும் அவரது மகளும் தப்பித்தார்களா, அவர்களுக்கு எலிஸ் எப்படித் துணையாக நிற்கிறார் என்பதே திகில் நிறைந்த திரைக்கதை.

Continue Reading…


Image of scene from the film Bethlehem Kudumba Unit
Director:Girish A. D.
Cast:Nivin Pauly, Mamitha Baiju, Sangeeth Prathap, Suresh Krishna, Vinay Forrt, Shyam Mohan, Bindu Panicker, Roshan Shanavas, Srindaa, Shameer Khan
Writer:Girish A. D., Kiran Josey

Bethlehem Kudumba Unit

Romance, Comedy, Drama (Malayalam)

க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!

Fri, August 21 2026

இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நாயகன், புதிதாக அந்த ஊருக்கு வரும் நாயகி, இவர்களுக்கு இடையே மலரும் உறவு, அங்குள்ள மனிதர்களிடையே வெளிப்படும் நகைச்சுவை தருணங்கள் என்பதாகத் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.

எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதரன் ஜோயல் (சங்கீத் பிரதாப்), ஒருபுறம் குறும்படம் எடுப்பதாக அலப்பறைகள் கொடுத்துவர, ஜஸ்டின் பொறுப்புடன் ஊருக்கு உதவுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஆஷ்லிக்கு ஜஸ்டினைப் பிடித்துப் போகிறது. இருவருக்கும் இடையே இருக்கும் 12-13 ஆண்டுகள் வயது வித்தியாசம் முதலில் ஜஸ்டினை யோசிக்க வைக்க, அவர்களின் காதலை ஊர் எப்படிப் பார்க்கிறது, ஜஸ்டின் என்ன முடிவெடுத்தார் என்பதை நல்லுணர்வுமிக்க காமெடி படமாகக் கொடுத்திருக்கிறார் `பிரேமலு’ புகழ் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.

Continue Reading…


Latest Reviews

Image of scene from the film Pyre
FCG Rating for the film Pyre: 71/100
Pyre

Drama (Hindi)

In the Himalayan Mountain range, a rural village loses its inhabitants to the city’s allure while… (more)

Image of scene from the film Nocturne
Nocturne

Crime, Drama, Mystery (English)

When a victim of notorious serial killer Jurek Walter unexpectedly turns up alive, detective Jonah Lynn… (more)

Image of scene from the film Udta Teer
FCG Rating for the film Udta Teer: 51/100
Udta Teer

Comedy, Action (Hindi)

An amnesiac Pakistani spy wakes up believing he is a patriotic Indian counter-terrorism officer.… (more)

Image of scene from the film Body
Body

Drama (Hindi)

In the post covid world, Manoj, a young, struggling actor, is trying to cope with his… (more)